உலகம்

அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட Telegram ? : தடை விதித்த உச்ச நீதிமன்றம் - எந்த நாட்டில் தெரியுமா?

அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட Telegram செயலிக்குப் பிரேசில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட Telegram ? : தடை விதித்த உச்ச நீதிமன்றம் - எந்த நாட்டில் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் பேசும்போது, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஒரே மாதிரியான வாய்ப்பை வழங்குவதில்லை. ஆளும் கட்சிகளுக்குச் சாதகமாகவே செயல்படுகின்றன என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், பிரேசிலில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் ஒருதலைபட்சமாகக் கருத்துகளைப் பகிரப்பட்டு வருவதாகக் கூறி Telegram செயலிக்குப் பிரேசில் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரேசில் நாட்டில் அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக அதிபர் போல்சனாரோ Telegram செயலியைப் பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் Telegram ஒருதலைபட்சமாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதிலிருந்து பொய் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்திய பிரேசில் நீதிமன்றம் Telegram செயலியில் ஒரு தலைபட்சமாக கருத்துகள் பகிரப்படுவதாகக் கூறி அச்செயலிக்குத் தடை வித்துள்ளது.

இது குறித்துக் கூறிய டெலிகிராம் நிறுவனத்தின் தலைவர் பாவெல் துரோவ் கூறுகையில், “எங்கள் அலட்சியத்திற்காக நான் பிரேசில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories