உலகம்

“சிங்கிள் ஃபைட்டுக்கு வர்றியா..?” - ரஷ்ய அதிபரை சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்!

ரஷ்ய அதிபர் புதினை ‘ஒத்தைக்கு ஒத்தை வர்றியா’ என எலான் மஸ்க் வம்புக்கு இழுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சிங்கிள் ஃபைட்டுக்கு வர்றியா..?” - ரஷ்ய அதிபரை சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நேட்டோ படையில் உக்ரைன் இணையும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2 வாரத்திற்கு மேலாகப் போர் தொடுத்து வருகிறது. இதற்கிடையில் நாங்கள் நேட்டோ படையில் இணைய விரும்பவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறிய பிறகு கூட தாக்குதலை கைவிடாமல் ரஷ்யா போர் நடத்தி வருகிறது.

இந்தப் போர் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் போரை இருநாடுகளும் கைவிட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. அதேபோல் போர் நிறுத்துவது குறித்து இரண்டு நாடுகளும் இதுவரை மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியிலேயே முடிந்துள்ளது.

மேலும் உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் எண்ணத்துடன் ரஷ்ய ராணும் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. ரஷ்யாவின் கை ஓங்கி வருவதால் அமெரிக்கா நேட்டோ படைகளை உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இது நடந்தால் மூன்றாவது உலகப்போருக்கான வழியாக இந்தப் போர் அமைந்துவிடும் என பலரும் கூறி வருகின்றனர்.

இந்தப் போர் தொடங்கிய நாளிலிருந்தே பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் ரஷ்ய அரசைத் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் உக்ரைன் நாட்டிற்குத் தனது தொழில்நுட்ப உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் எலான் மஸ்க், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு அழைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "விளாடிமிர் புதினுக்கு சவால் விடுகிறேன். என்னுடன் நேருக்கு நேர் மோதத் தயாரா? உங்கள் கரடியையும் நீங்கள் துணைக்கு அழைத்து வரலாம்” எனப் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இவரது இந்தப் பதிவு உலகளவில் வைரலாகி வருகிறது. இருப்பினும் எலான் மஸ்க்கின் இந்தப் பதிவுக்கு இதுவரை ரஷ்ய அதிபர் புதின் பதிலளிக்கவில்லை.

banner

Related Stories

Related Stories