உலகம்

அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளை 'Unfriend’ செய்த ரஷ்யா... காரணம் என்ன?

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், உக்ரைன் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்ளது.

அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளை 'Unfriend’ செய்த ரஷ்யா... காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ் ஆகிய பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

போரை நிறுத்துமாறு பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதனையடுத்து உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் பொருளாதார தடை விதித்தன.

மேலும், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.,வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதில் ரஷ்யாவிற்கு எதிராகவும் சில நாடுகள் வாக்களித்தன.

இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, உக்ரைன், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சிங்கப்பூர், ஜப்பான், நார்வே, தென்கொரியா, தைவான், ஐஸ்லாந்து, மொனாக்கோ, மாண்டினீக்ரோ, நியூசிலாந்து, சான் மரினோ உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories