சுழற்பந்து ஜாம்பவானாக அழைக்கப்படும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வார்னே கடந்த 4ம் தேதி தாய்லாந்தில் உள்ள அவரது பங்களாவில் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி செய்தியைக் கேட்டு கிரிக்கெட் உலகமே கண்ணீர் விட்டது. மேலும் முன்னாள், இன்னாள் வீரர்கள் என பிரபலங்கள் பலரும் அவருக்கு இறங்கல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தாய்லாந்தில் ஷேன் வார்ன் உடல், உடற்கூறு ஆய்வு நடந்து வரும் நிலையில் அவரது மரணம் குறித்து போலிஸார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில்,"ஷேன் வார்ன் தங்கியிருந்த பங்களாவை நாங்கள் முழுமையாக சோதனை செய்தோம். அப்போது தரையிலும், துண்டுகள் மற்றும் தலையணைகளில் ரத்தக்கறைகள் இருந்தது.
இது குறித்து அவரது நண்பர்களிடம் கேட்டபோது, ஷேன் வார்னுக்கு சிபிஆர் சிகிச்சை அளித்தபோது அவருக்கு இருமல், ரத்தப்போக்கு ஏற்பட்டதாகக் கூறினர். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு 20 நிமிடங்கள் அவரது நண்பர் சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளார்.
மேலும் வேஷ் வார்னுக்கு ஆஸ்துமா, இதயப்பிரச்சனை இருந்துள்ளது. அதேபோல் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான தடையங்கள் அதுவும் இல்லை" என தெரிவித்துள்ளனர். ஷேன் வார்ன் மூன்று மாதம் ஓய்வு எடுப்பதற்காகவே தாய்லாந்து வந்துள்ளார். இந்நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு தனது பங்களாவில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.