உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன்தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.
குறிப்பாக, கடந்த 24ம் தேதி ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியது. ரஷ்ய அதிபர் தொலைக்காட்சியில் தோன்றி உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிட்டதையடுத்து உக்ரைன் மீது ரஷ்ய நாட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதை. ரஷ்ய விமானப் படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது.
அங்குள்ள விமானத்தளங்கள் மற்றும் வான் பாதுகாப்புத் தளங்களையும் தாக்கியது. பதிலுக்கு உக்ரைன் ராணுவம், ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்தினார்கள். இரு நாடுகளுக்கும் இடையே முதல் நாளிலேயே கடும் போர் நடந்தது. பெரும் அழிவை
ரஷ்யா போர் விமானங்கள் உக்ரைனில் உள்ள முக்கிய பகுதிகளை தாக்கி அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இதனால் போர் தொடங்கிய முதல் நாளிலேயே உக்ரைன் பெரும் அழிவை சந்தித்தது. ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதால் சேதம் அதிகமாகக் காணப்பட்டது. துல்லிய ஆயுதங்கள் மூலம் விமான தளங்களையும் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் அதிரடி தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த ஏராளமான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. உக்ரைன் ராணுவம் தரப்பில் 40 பேர், பொதுமக்களில் 10 பேர் இறந்ததாகவும், ரஷ்ய கிளர்ச்சி படையைச்சேர்ந்த 100 பேரை உக்ரைன் ராணுவம் சுட்டுக்கொன் றதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்தது.
இடைவிடாமல் வான் தாக்குதலுக்குப் பிறகு, ரஷ்ய படைகள் தலைநகர் கீவில் நுழைந்தன. கீவ் நகரின் வடக்கு பகுதியில் ரஷ்ய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தியபடியே முன்னேறி செல்கின்றன. உக்ரைன் நாட்டின் போர் விமானத்தையும் ரஷ்ய படை சுட்டுவீழ்த்திய தாகவும் இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்து விட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித் துள்ளது. ஐ.நா மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த பல மணி நேரமாக உக்ரை னில் முழு அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது. அது தொடர்பான காட்சிகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைனில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்தப்படையால் உக்ரைன் ரஷ்யா இன்று உலக நாடுகளும் கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக தற்போது, விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ‘சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம்’ (International Space Station - ISS) செயல்பட முடியாத நிலையில், அமெரிக்காவுக்கு அல்லது ஐரோப்பாவுக்கு மேல் விழலாம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
சர்வதேச வின்வெளி நிலையத்தின் (ISS) இயங்கு பொறிமுறையை ரஷ்யாவே வழி நடத்துகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இதனை ஒரு ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாக செய்தி வெளியாகியுள்ளது.