உலகம்

பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரஷ்யா.. நிராகரித்த உக்ரைன்: என்ன செய்ய காத்திருக்கிறார் அதிபர் ஜெலன்ஸ்கி?

ரஷ்யாவின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.

பேச்சுவார்த்தைக்கு அழைத்த ரஷ்யா.. நிராகரித்த  உக்ரைன்: என்ன செய்ய காத்திருக்கிறார் அதிபர் ஜெலன்ஸ்கி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 4வது நாளாக தாக்குதல் தொடுத்து வருகிறது. இதன் காரனமாக உக்ரைன் மக்கள் கண்ணீருடன் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும் தொடர் குண்டு சத்தம் கேட்டுக்கொண்டே இருப்பதால் உக்ரைன் மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். கிவ் நகரைத்தை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளதால் அங்கு இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டு வருகின்றனர்.

அதேபோல், இருநாடுகளும் தாக்குதலைக் கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தையில் தீர்வுகாண வேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து பெலாரஸின் ஹோமெல் நகரில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

இந்த அழைப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்துள்ளார். மேலும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தாமல் போலந்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இருநாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதால், விரைவிலேயே இந்தப்போர் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories