உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா நேற்று தனது தாக்குதலை தொடங்கியது. உக்ரைனின் தலைநகரை முழுமையாகக் கைப்பற்றும் எண்ணத்துடன் படைகள் முன்னேற்றி வருகின்றன.
2வது நாளாக தொடரும் இந்த தாக்குதலில் இதுவரை 137 வீரர்கள் பலியாகி உள்ளனர். முதல் நாளில் மட்டும் 11 விமானப்படைத் தளங்கள் உட்பட 74 ராணுவ தளங்களை அழித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்கனவே பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. இதனிடையே ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்ய உக்ரைன் மீது போர் தொடுப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழி இல்லை என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதேபோல், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்த நாடுகளுக்கு எதிராகப் பொருளாதார தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 137 இறந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் உக்ரைன் ராணுவ வீரர் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 13 வினாடி ஓடும் அந்த வீடியோவில், 'அம்மா, அப்பா நான் உங்களை நேசிக்கிறேன்' என பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, உக்ரைக் ராணுவ வீரர்களுக்கு ஆதரவா நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பேரை நிறுத்தவேண்டும் என்ற கூறிவருகின்றனர்.