உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியது.
மும்பை பங்குச்சந்தையில் Sensex 2000 புள்ளிகளுக்கு மேல் சரிவு. NIFT 600 புள்ளிகளுக்கு மேல் சரிவு.
ரஷ்யா போரை தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
உக்ரைனில் வசிக்கும் தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் நடவடிக்கை.
உக்ரைனில் கல்வி பயிலும் மாணவர்கள், பணியாற்றும் தமிழர்கள் நாடு திரும்ப உதவி தேவைப்பட்டால் 044-28515288 /
96000 23645 / 99402 56444 எண்களை தொடர்பு கொண்டும் , www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் உதவிகள் கோரலாம்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளவில் பேரழிவு ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!
உக்ரைன் மீது குண்டு மழையை பொழிகிறது ரஷ்யா!
உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு!