உலகம்

Leave வேண்டும் என்பதற்காக கர்ப்பிணியாக வேஷம்போட்ட பெண்.. போலி குழந்தை, போலி கணவர் என நாடகமாடியது அம்பலம்!

ஊதியத்துடன் வேறுகால விடுப்பு வேண்டி பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்ததாக நாடகமாடிய சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave வேண்டும் என்பதற்காக கர்ப்பிணியாக வேஷம்போட்ட பெண்.. போலி குழந்தை, போலி கணவர் என நாடகமாடியது அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பள்ளியில் இருந்து நிறுவனங்கள் வரை விடுமுறைக்காகப் பலரும் பல விதங்களில் பொய் பேசி ஏமாற்றியதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் விடுமுறைக்காக கர்ப்பிணி போல் நாடகமாடியது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ராபின் ஃபோல்சம். இவர் ஜார்ஜியா தொழிற்துறை மறுவாழ்வு முகமையில் வெளிவிவகார இயக்குநராக பணியாற்றி வந்தார். இவர் விடுமுறையுடன் கூடிய வேறுகால விடுப்பு எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.

அதற்காக தனது வயிற்றில் துணிகளைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணி போன்ற உடை அணிந்து கொண்டு சக ஊழியர்களையும், நிறுவன அதிகாரிகளையும் ஏமாற்றியுள்ளார். பின்னர் தனதுக்கு பேறுகால விடுமுறை வேண்டும் என நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையடுத்து, சக ஊழியர் ஒருவர் அந்த பெண்ணின் வயிற்றுப் பகுதி கர்ப்பிணி போல இல்லாததை கவனித்துள்ளார். இதனால் அவர் மீது பலருக்கும் சந்தேகம் இருந்துள்ளது. அந்நிலையில் பின்னர் குழந்தை பிறந்துவிட்டது எனக் கூறி சக ஊழியர்களுக்குப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதில், ஒரே மாதிரி குழந்தைகள் படம் இல்லாமல் வெவ்வேறு குழந்தைகளின் புகைப்படம் இருந்ததால் ஊழியர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து விசாரணை செய்தபோது, கர்ப்பிணியாக விடுமுறை எடுத்த காலத்தில் அவர் எந்த மருத்துவமனையிலும் சென்று சிகிச்சை பார்க்கவில்லை என்பதும், கணவன் எனக் கூறிய நபரும் அவருது கணவர் இல்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும், விசாரணை செய்தபோது, ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு எடுக்கவே இவர் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை பணியிலிருந்து அந்நிறுவனம் நீக்கியுள்ளது. இந்த மோசடிக்காக அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories