ட்விட்டர் இணைய சேவையை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் உலகத் தலைவர்களும் ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சமீபகாலமாக ட்விட்டர் இணைய சேவை தொழில்நுட்ப கோளாறுகளைச் சந்தித்து வருகிறது. இது தன் பயனாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி வந்த நிலையில் மீண்டும் நேற்று சேவை முடங்கியது அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நேற்று இரவு இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் ஒரு மணி நேரம் ட்விட்டர் சேவை முடங்கியது. இதனால் அதன் பயனாளர்கள் அவதிப்பட்டனர்.
பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகே இந்த பிரச்சனை ட்விட்டர் நிறுவனம் சரி செய்யப்பட்டதை அடுத்து பயனாளர்கள் நிம்மதியடைந்தனர். இதையடுத்து ட்விட்டர் நிறுவனம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது நிலைமை சீரடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தொழில் நுட்ப பிரச்சனைக்குத் தனது பயனாளர்களிடம் ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இருப்பினும் ஏன் இப்படி அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது என பயனாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.