அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம்தான் பென்டகன். விர்ஜீனியாவில் அமைந்துள்ளது.
இந்த பென்டகனுக்குள் செல்ல அரசு அதிகாரிகளுக்கே ஏகப்பட்ட கெடுபிடிகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. மேலும் பென்டகனுக்குள் எக்கச்சக்கமான பாதுகாப்பு வளையங்களும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அங்கு விலங்குகள், பறவைகள் என எவற்றுக்கும் நடமாட அனுமதி கிடையாது. இப்படி எவராலும் முடியாத ஒன்றை சாதாரண கோழி ஒன்று செய்திருப்பது பெரும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆம், பென்டகன் வளாகத்துக்குள் கடந்த திங்களன்று காலை கோழி ஒன்று சுற்றித் திரிந்திருக்கிறது. இதனைக் கண்ட அதிகாரிகள் சிறிதும் தாமதிக்காது அதனை பிடித்து காவலில் எடுத்து வைத்திருக்கிறார்கள்.
சிறை பிடித்த கோழியிடம் வெடிகுண்டோ அல்லது வைரஸ் ஏதும் இருக்கிறதா என தீவிரமாக பரிசோதித்திருக்கிறார் பென்டகன் அதிகாரிகள். மேலும் சிறிது நேரம் காண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். இதனையடுத்து விர்ஜீனியாவின் விலங்குகள் நல அமைப்பிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதனையடுத்து அடையாளம் தெரியாத அந்த கோழி மேற்கு விர்ஜீனியாவில் உள்ள பண்ணையில் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது என்றும் அதற்கு ஹென்னி பென்னி என பெயரிடப்பட்டிருப்பதாகவும் விலங்குகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.