உலகம்

செத்துப்போன 1 லட்சம் மீன்களை நடுக்கடலில் கொட்டிய கப்பல்.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்: பின்னணி என்ன?

செத்துப்போன 1 லட்சம் மீன்களை நடுக்கடலில் கொட்டிய சம்பம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செத்துப்போன 1 லட்சம் மீன்களை நடுக்கடலில் கொட்டிய கப்பல்.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டனம்: பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரான்ஸ் நாட்டின் மேற்கு அட்லாண்டிக்கா பெருங்கடல் பகுதியில் நட்சு நாட்டை சேர்ந்த பிரபல மீன்பிடி கப்பல் கடந்த வியாழனன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தது. அப்போது இந்தக் கப்பலிலிருந்து செத்துப்போன 1 லட்சம் மீன்கள் கடலில் கொட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், "இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என பிரான்ஸ் நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் அன்னிக் ஜிரிர்டின் தெரிவித்துள்ளார். மேலும் உரிய ஆதாரங்களை எதிர்நோக்கி உள்ளதாக மீன் வளத்திற்கான ஐரோப்பிய ஆணையர் விர்ஜினிஜஸ் சின்கோவிசியஸ் கூறியுள்ளார்.

இந்த மீன்பிடி கம்பல், மீன் வலையில் ஏற்பட்ட சிதைவு காரணமாக மீன்கள் கடலில் கொட்டியிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஒரு லட்சம் இறந்த மீன்கள் 32,300 சதுர அடிக்குக் கடல் பரப்பில் மிதந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கம்பல் ஏற்கனவே 2012ம் ஆண்டு இதேபோன்று ஒரு சர்ச்சையில் சிக்கியது. அப்போது ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு இழுவை வலைகளைப் பயன்படுத்தியதற்காகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த கம்பல் ஆஸ்திரேலியா கடல் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் செத்துப்போன மீன்களைக் கடலில் கொண்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories