உலகம்

‘மீண்டும் ஒரு சுஜித்’: 100 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்.. மொராக்கோ நாட்டின் அவலம்! #SaveRayan

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் ஐந்து நாள் மீட்புப்பணிக்குப்பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் உலகளவில் சோகத்தை பெரும் ஏற்படுத்தியுள்ளது.

‘மீண்டும் ஒரு சுஜித்’: 100 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்.. மொராக்கோ நாட்டின் அவலம்! #SaveRayan
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மொராக்கோ நாட்டின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் உள்ளது. இங்குக் கடந்த செவ்வாயன்று ராயன் அவ்ரம் என்ற ஐந்து வயது சிறுவன் 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் உடனே சிறுவனை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் சிறுவனுக்கு அந்த குழாய் வழியாகத் தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. அப்போது சிறுவன் என்னைத் 'தூக்குங்கள்.. தூக்குங்கள்..' என கூறியதாக மீட்பு படையில் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அங்கிருந்த சிறுவனின் பெற்றோர் உட்பட பலரும் கதறி அழுதனர். பின்னர் சிறுவர் மீட்பு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் கவனம் பெற்றது. மேலும் #SaveRayan என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி சிறுவனுக்காக இறைவனை வேண்டினர்.

‘மீண்டும் ஒரு சுஜித்’: 100 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்.. மொராக்கோ நாட்டின் அவலம்! #SaveRayan
‘மீண்டும் ஒரு சுஜித்’: 100 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்.. மொராக்கோ நாட்டின் அவலம்! #SaveRayan
‘மீண்டும் ஒரு சுஜித்’: 100 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்.. மொராக்கோ நாட்டின் அவலம்! #SaveRayan

பின்னர் மீட்பு பணி நடைபெற்ற இடத்தில் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான் என்ற செய்தி கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்து. சிறுவனின் நற்செய்திக்காகக் காத்திருந்தனர். இதையடுத்து சிறுவன் விழுந்த பகுதியைச் சுற்று புல்டோசர்களைப் பயன்படுத்தி, 100 ஆழத்திற்கு இணையான பள்ளத்தை தோண்டி மீட்பு பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ஐந்து நாட்களாக நடைபெற்ற வந்த மீட்பு பணியில் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவன் உயிரிழந்து விட்டதாக மொராக்கோ மன்னர் ஆறாம் முகமது அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு குடியிருந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories