இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிண்டிங் நிறுவனம் ஒன்று மார்கெட்டிங் பணிக்கு ஆட்சேர்க்கைக்காக அழைப்பு விடுத்திருந்தது. அந்தப் பணிக்காக 140 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
24 வயதான இளைஞர் ஒருவர் தனது செயலால் அந்த பிரிண்டிங் நிறுவனத்தை ஆச்சரியப்படுத்தி அந்த மார்க்கெட்டிங் வேலையைப் பெற்றிருக்கிறார்.
ஜோனதன் என்ற 24 வயது இளைஞர், அந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வழக்கமான பாணியைப் பின்பற்றாமல் தன்னுடைய ரெஸ்யூமில் LinkedIn ப்ரொஃபைலை QR கோட் மூலமாக இணைத்து அதை பிரிண்ட் செய்துள்ளார்.
பிரிண்ட் செய்து அதை நிறுவனத்தின் கார் பார்க்கிங்கில் இருக்கும் எல்லா கார்களின் முகப்பு கண்ணாடியிலும் ஒவ்வொன்றாக வைத்து கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார்.
தன்னையே திறமையாக மார்க்கெட்டிங் செய்து கொண்டவர் இந்தப் பணிக்கு பொருத்தமானவர் என முடிவு செய்து அவரையே பணிக்குத் தேர்வு செய்துள்ளது அந்த நிறுவனம்.
ஜோதனை பணிக்குச் சேர்த்த அதிகாரி இதுகுறித்து, "ஜோனதன் எங்களுடைய கவனத்தைப் பெற்றிருக்கிறார். நிறுவனத்தை பற்றி தெரிந்து வைத்திருப்பவராகவும் சரியான அணுகுமுறையோடு கிரியேட்டிவிட்டியான ஆளாகவும் நகைச்சுவை உணர்வோடும் இருக்கிறார். எனவே எங்கள் அணிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.