கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காகவே உலகெங்கிலும் உள்ள மக்கள் பல்வேறு வகைகளில் சாகசங்களையும் சாதனைகளையும் புரிந்து வருகிறார்கள்.
அவ்வகையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்பூனை வைத்து சாதனை புரிந்ததோடு ஸ்பெயினைச் சேர்ந்தவரின் சாதனையையும் முறியடித்திருக்கிறார்.
அதன்படி, ஈரானைச் சேர்ந்த அபோல்ஃபாஸ்ல் சபெர் மொக்தாரி என்ற நபர் தனது உடலில் 85 ஸ்பூன்கலை சமநிலையில் வைத்து அசத்தியுள்ளார்.
இதனை கின்னஸ் உலக சாதனை நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான அதன் இன்ஸ்டாகிராம் பதிவில் மொக்தாரியில் சாதனை வீடியோவை பகிர்ந்ததோடு அதில், அவர் பேசியது குறித்தும் பதிவிடப்பட்டுள்ளது.
மொக்தாரி இது குறித்து கூறியதாவது, ‘இதுப்போன்ற திறமை தன்னிடம் இருப்பதை சிறு வயதிலேயே தற்செயலாக கவனித்திருக்கிறேன். அதற்கு பிறகு அந்த திறமையை வெளிக்கொணரும் வகையில் பல தருணங்களில் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தேன்.
தற்போது அந்த திறமையை எனது முயற்சியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன். மேலும் ஸ்பூன் மட்டுமல்ல பழங்கள், கண்ணாடி, கற்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களையும் என்னால் சமநிலையில் என் உடலில் வைக்க முடியும் எனக் கூறியிருக்கிறார்.
முன்னாதக ஸ்பெயினைச் சேர்ந்த மார்கோஸ் ரூயிஸ் செபாலோஸ் என்பவர் 64 ஸ்பூன்களை தன் உடலில் சமன் செய்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்றிருந்தார். தற்போது மார்கோஸின் சாதனையை 50 வயதான மொக்தாரி முறியடித்திருக்கிறார்.