பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தொலைக்காட்சியின் முதன்மை செய்தி நேரத்தில் செய்தி வாசிப்பாளராகி புகழ்பெற்றுள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் உள்ள மாவோரி பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருபர் செய்தி வாசிப்பாளராக புகழ்பெற்ற செய்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து நாட்டில் உள்ள மாவோரி இன பெண்கள் தங்களின் கீழ்தாடைகளில் ”மோக்கோ காவூவே” (moko kauae) என்ற டாட்டூ குத்திக் கொள்வது வழக்கம்.
ஓரினி கைபாரா என்ற பெண் 2017ஆம் ஆண்டு அவருடைய டி.என்.ஏ சோதனைகள் முழுமையான மாவோரி இனத்தை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்த நிலையில் moko kauae டாட்டூவை உதடுகளிலும் கீழ்த் தாடையிலும் குத்திக் கொண்டார்.
மாவோரி பழங்குடி இனத்தில் குழந்தையில் இருந்து இளம் வயது பெண்ணாக மாறும் பருவத்தை பறைசாற்றும் அடையாளமாக moko kauae டாட்டூ பார்க்கப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு TV NZ சேனலில் பணியாற்றிய கைபாரா, பின் நியூஸ் ஹப் லைவில் பணிக்குச் சேர்ந்தார். நியூஸ்ஹப் லைவ் நிகழ்ச்சியில் 6 மணி செய்தி வாசிப்பாளராக அவர் செய்தி வாசித்தது வைரலாகப் பரவி உலக அளவில் பிரபலமாகியுள்ளார்.