இந்தியா

தூசிக்கு போரா? துண்டு அவிழ்ந்தும் சண்டையை நிறுத்தாத DSP.. இந்தூரில் பரபரப்பு; வைரலாகும் CCTV வீடியோ

பக்கத்து வீட்டுக்காரருடன் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட மத்திய பிரதேச டி.எஸ்.பியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தூசிக்கு போரா? துண்டு அவிழ்ந்தும் சண்டையை நிறுத்தாத DSP.. இந்தூரில் பரபரப்பு; வைரலாகும் CCTV வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜெயின் லோக் ஆயுக்தா பகுதியில் காவல்துறை டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார் வேதாந்த் ஷர்மா. இவரது வீடு லக்‌ஷ்யா விஹார் காலனியில் உள்ளது.

வேதாந்த் ஷர்மாவின் அண்டை வீட்டார் சந்தீப் விஜ். இவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியாவார். சில நாட்களாக சந்தீப் தனது வீட்டை புணரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அவர் வீட்டில் இருந்து வெளியே நிறுத்தப்பட்டுள்ள டிஎஸ்பியின் விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ கார் மீது தூசு விழுவது வாடிக்கையாகியிருக்கிறது.

இதனால் சந்தீப் வீட்டு பணியாளர்களிடம் வேதாந்த் ஷர்மா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதுபோக சந்தீப் மீது வழக்கும் தொடர்ந்திருக்கிறார். இதனை அறிந்த சந்தீப் இந்த விவகாரத்தில் சமாதானம் பேச டிஎஸ்பியை அணுகியிருக்கிறார்.

அப்போது இருவரும் வீட்டு வாசலில் இருந்து பேசிக் கொண்டிருந்த போது வாக்குவாதம் முற்றியிருக்கிறது. இதனையடுத்து சந்தீப்பை டிஎஸ்பி தாக்கியிருக்கிறார். பதிலுக்கு சந்தீப்பும் அவரை தாக்கியிருக்கிறார்.

இந்த தாக்குதலில் டிஎஸ்பி வேதாந்த் ஷர்மா இடுப்பில் கட்டியிருந்த துண்டு அவிழ்ந்து விழ அந்நேரம் சந்தீப் எஸ்கேப் ஆகியிருக்கிறார். பின்னர் துண்டை சரிசெய்துக் கொண்டு குச்சியோடு சந்தீப்பை துரத்திச் சென்றிருக்கிறார் டி.எஸ்.பி.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. டிசம்பர் 25ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. தூசு விழுந்ததற்காக டிஎஸ்பியின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories