பின்லாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் சன்னா மரின். இவர் உலகியே இளம் பிரதமரும் கூட. இவர் அந்நாட்டின் சோசியல் டெமாக்ரட்டிக் கட்சியைச் சேர்ந்தவர்.
இந்நிலையில் அவரது அமைச்சரவையில் இருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், பிரதமர் சன்னா மரின் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் விடுதி ஒன்றில் அதிகாலை நான்கு மணி வரை நடனமாடி உற்சாகமாக இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கொரோனா விதிகளை மதிக்காமல் இப்படி பிரதமரே வெளியே சுற்றுவது சரிதானா என அந்நாட்டு மக்கள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், பிரதமர் சன்னா மாரின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதற்கு நீண்ட விளக்கம் கொடுத்து பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவரது ஃபேஸ்புக் பதிவில், சனிக்கிழமை மாலை எனது செயலாளர் பாராளுமன்ற தொலைபேசியில் அழைத்து அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பற்றி கூறினார்.
மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதால் பிரச்சனை எதுவும் இல்லை என கூறப்பட்டது. இதுகுறித்து நான் கேள்வி கேட்கவில்லை. இது தவறானதுதான். இதற்கு நான் உண்மையாகவே வருந்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.