சந்திரனின் மறுபக்கத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சீனாவின் Yutu-2 ரோவர், ஒரு கியூப் வடிவ மர்ம பொருளைக் கண்டறிந்துள்ளது.
சீனாவின் Yutu-2 ரோவர், 2019ஆம் ஆண்டு முதல் சந்திரனின் மறுபக்கத்தை ஆராய்ந்து வருகிறது. இந்த ரோவர் சமீபத்தில் ஒரு மர்மமான கனசதுர வடிவ பொருளைக் கண்டறிந்துள்ளது.
சீனாவின் விண்வெளித் திட்டம் குறித்த தகவல்களை வெளியிடும் பத்திரிகையாளர் ஆண்ட்ரூ ஜோன்ஸ், சமீபத்தில் தொடர்ச்சியான ட்வீட்கள் மூலம் ரோவர் பற்றிய அப்டேட்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, வான் கார்மன் பள்ளத்தில் ரோவரில் இருந்து 80 மீ தொலைவில் உள்ள கன வடிவப் பொருளின் படத்தை Yutu-2 ரோவர் படம் பிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
ரோவர் சந்திரனை இன்னும் நெருங்கி வரும்போது, பொருளின் உண்மையான தன்மையை நிபுணர்கள் புரிந்துகொள்ளும் வகையிலான சிறந்த படங்களை எடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
Yutu-2 ரோவர் பயணத்தின் ஆரம்ப நாட்களில், 'ஜெல் போன்ற' பொருள் ஒன்றைக் கண்டுபிடித்தது. ஆனால் பின்னர் அது பாறை எனத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.