பரிணாம வளர்ச்சி அடைந்த விஞ்ஞான உலகில் எதுவும் சாத்தியமில்லை என்பதை ஆராய்ச்சியாளர் நித்தமும் நிரூபித்த வண்ணம் உள்ளனர்.
அதன்படி தற்போது உலகின் முதல் உயிருள்ள ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்தான் இந்த இனப்பெருக்கம் செய்யக் கூடிய ரோபோக்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
அமெரிக்காவின் Vermont, Tuffs, Harvard ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆப்பிரிக்க தவளையின் ஸ்டெம் செல்களில் இருந்து தன்னைத் தானே மீளுருவாக்கம் செய்யக் கூடிய ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.
2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சோதனையில் தற்போது முதல் முடிவு எடப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் உள்ள இந்த Xenobotsகள் குழுக்களாக இணைந்து செயல்படவும், நகரும் தன்மை கொண்டதாகவும், சுயமாக குணப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புதிய கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் மிகப்பெரிய பலனை அளிக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த வகையான ரோபோக்கள் புற்றுநோய் , பிறவியிலேயே ஏற்படும் குறைபாடுகளை களைய உதவும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறதாம்.
இனப்பெருக்கம் செய்யக்கூடிய இந்த ரோபோக்கள் மூலம் விஞ்ஞான உலகில் மிகப்பெரிய புரட்சியையே ஏற்படுத்தும் என்றும் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.