உகாண்டா நாட்டின் தலைநகராக கம்பாலாவில் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக செய்கிதள் வெளிவந்துள்ளன.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தற்கொலைப் படை பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற குண்டு வெடிப்பின் நீட்டியாக இந்த தாக்குதல் நடந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் தொடர்புடைய சோமாலியா கிளர்ச்சிக்குழு அல் ஷாப் பயங்கரவாத குழுவிற்குத் தொடர்பு இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கம்பாலாவில் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டி நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி வீரங்கள் சென்றுள்ளனர். இவர்கள் தங்கியிருந்த விடுதியின் அருகேதான் ஒரு குண்டுவெடித்துள்ளது. மற்றொரு நாடாளுமன்ற அருகே வெடித்துள்ளது. இதையடுத்து தற்போது இந்திய வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதாகச் செய்தி வெளிவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கவுரவ் கண்ணா, “நாங்கள் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. உடனே வீதிகளில் மக்கள் அலறியடித்து ஓடியதை நாங்கள் பார்த்தோம்.
அப்போதுதான் எங்களுக்கு அருகே ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது என்று தெரிந்தது. உடனே நாங்கள் விடுதி அறைக்குத் திரும்பினோம். எங்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டன. தொடரை முடித்துவிட்டே நாடு திரும்ப உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.