உலகம்

உலகத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக... விண்வெளியில் 12 நாட்கள் சினிமா ஷூட்டிங் நடத்தி அசத்திய ரஷ்யா!

விண்வெளியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரஷ்ய படக்குழுவினர் பூமிக்கு திரும்பியுள்ளனர்.

உலகத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக... விண்வெளியில் 12 நாட்கள் சினிமா ஷூட்டிங் நடத்தி அசத்திய ரஷ்யா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ரஷ்யப் படக்குழுவினர், விண்வெளியில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பியுள்ளனர். படக்குழுவினர் பூமியில் தரையிறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல ரஷ்ய திரைப்பட இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ 'தி சேலஞ்ச்' என்ற படத்தை இயக்கி வருகிறார். புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் ஓர் விண்வெளி வீரருக்கு அவசர இருதய அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில் விண்வெளி செல்லும் ஓர் மருத்துவர் அதனை எவ்வாறு வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் என்பதே இப்படத்தின் மையக்கரு.

இதற்காக விண்வெளியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்த படக்குழு, சர்வதேச விண்வெளி மையம் செல்லத் தீர்மானித்தது. இதற்காக இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்றனர்.

இயக்குநர் க்ளிம் ஷிபென் கோ (38), நடிகை யுலியா பெரெஸில்ட், விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெ ரோவ் ஆகியோர் கடந்த 5ஆம் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் எம்.எஸ்-19 ஏவுகணை மூலம் அவர்கள் விண்வெளிக்குச் சென்றனர்.

உலகத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக... விண்வெளியில் 12 நாட்கள் சினிமா ஷூட்டிங் நடத்தி அசத்திய ரஷ்யா!

விண்வெளியில் 12 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பின்னர், சோயூஸ் எம்.எஸ்-18 விண்கலம் மூலம் நேற்று பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுடன் ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரரும் தனது 190 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளார்.

உலகத் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக விண்வெளியில் ரஷ்ய திரைப்படம் படமாக்கப்பட்டிருப்பது உலக மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories