உலகம்

ஒரு நாள் இரவுதான் முடங்கின; மார்க்கின் 7 பில்லியன் டாலர் க்ளோஸ் - மீண்டும் பணக்கார பட்டியலில் சரிவு!

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கத்தால் மார்க் ஸக்கர்பெர்க்குக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.

ஒரு நாள் இரவுதான் முடங்கின; மார்க்கின் 7 பில்லியன் டாலர் க்ளோஸ் - மீண்டும் பணக்கார பட்டியலில் சரிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் ஃபேஸ்புக் மற்றும் அதன் துணை நிறுவனங்களான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் முடங்கியது பயனர்களிடையே பெரும் பரிதவிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சமூக வலைதளங்கள் முடங்கியுள்ளதாகவும் விரைவில் இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டு விரைவில் சேவை தொடங்கும் என்று ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் கிட்டதட்ட ஆறு மணிநேரத்துக்கும் மேலாக முடங்கியதால் ட்விட்டர், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் பயனர்கள்.

இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க்குக்கு 7 பில்லியன் டாலர் (52,000 கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்க்கின் சொத்து மதிப்பு 120.9 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. ஏற்கெனவே உலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் மார்க் ஸக்கர்பெர்க் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோக இந்த முடக்கம் தொடர்பாக ஃபேஸ்புக்கே ட்விட்டரில் வந்து பதிவிட்டது நெட்டிசன்களிடையே கேலிக்குள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories