வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உலகின் முன்னணி சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்றும் திடீரென முடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், பல கோடிக் கணக்கானோர் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உலகின் பல நாடுகளில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவைகள் இயங்கவில்லை. இதனால் பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சமூக வலைதளங்கள் முடங்கியுள்ளதாகவும் விரைவில் இந்தக் கோளாறு சரிசெய்யப்பட்டு விரைவில் சேவை தொடங்கும் என்று ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.