உலகம்

தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை போட்ட தாலிபான்கள் : கடும் கட்டுப்பாடுகளால் அதிர்ச்சியில் ஆப்கன் ஆண்கள்!

ஆண்களின் தாடியை வெட்டவோ, ட்ரிம் செய்யவோ கூடாது என சலூன் கடைக்காரர்களுக்கு தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தாடியை ஷேவ், ட்ரிம் செய்ய தடை போட்ட தாலிபான்கள் : கடும் கட்டுப்பாடுகளால் அதிர்ச்சியில் ஆப்கன் ஆண்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் அந்நாட்டைக் கைப்பற்றினர். இதையடுத்து பிரதமராக முல்லா முகமது ஹசனும், துணை பிரதமராக அப்துல் கனி பரதரும் பதவி ஏற்று ஆட்சி செய்து வருகின்றனர்.

தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பொதுமக்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது, கல்லூரிகளில் பெண்களும், ஆண்களும் தனித்தனியாக அமர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளைத் தாலிபான்கள் விதித்துள்ளனர்.

அதேபோல், விளையாட்டு, இசை, சினிமா போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்குத் தாலிபான்கள் முற்றிலுமாக தடை விதித்துள்ளனர். இதனால் மீண்டும் தாலிபான்களின் கொடூர ஆட்சி நடக்குமோ என ஆப்கன் மக்கள் அஞ்சுகின்றனர்.

இந்நிலையில் ஆப்கனின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என்று சலூன் கடைக்காரர்களுக்குத் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சலூன் கடைகளில் மேற்கத்திய இசை போன்றவற்றையும் ஒலிக்கக்கூடாது. இதை மீறினால் பொதுவெளியில் தண்டிக்கப்படுவார்கள் என தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆண்களும், சலூன்கடைக்காரர்களும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் கூட கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி நான்கு பேரைச் சுட்டுக் கொலை செய்து அவர்களின் சடலங்களைத் தாலிபான்கள் பொதுவெளியில் தொங்கவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories