உலகம்

“சாத்தானின் எண்.. ராசியில்லாத எண்..” : மூடநம்பிகையை தோளில் சுமக்கும் மக்கள் - 13ஆம் எண்ணின் பின்னணி?

‘13 என்பது சாத்தானின் எண்’ எனத் தொடங்கும் நம்பிக்கைப் பட்டியல், ‘13ஆம் எண் ராசியில்லை’, ‘13ஆம் நாளில் பேய் வரும்’ என்பன போன்ற பலவித நம்பிக்கைகளாக அமெரிக்காவில் வளர்ந்து விரிந்து கிடக்கிறது.

“சாத்தானின் எண்.. ராசியில்லாத எண்..” : மூடநம்பிகையை தோளில் சுமக்கும் மக்கள் - 13ஆம் எண்ணின் பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

உலகின் பல்வேறு நாடுகள் கொண்டிருக்கும் பலவித நம்பிக்கைகளில் ஒன்று பதின்மூன்றாம் எண் பற்றிய நம்பிக்கை!

பொதுவாக 13ஆம் எண் ராசியில்லாத எண்ணாகத்தான் பார்க்கப்படுகிறது. நம்மூரிலேயே கூட பதின்மூன்றாம் நம்பர் வீடு என பேய்ப் படங்களை நாம் பார்த்திருப்போம். இந்த நம்பிக்கைக்கு பிறப்பிடமாக இருப்பது அமெரிக்க நாடுகள்.

அமெரிக்காவின் வானுயர்ந்த பல கட்டிடங்களுக்கு சென்று பார்த்தால் 13ஆம் எண் அந்த மக்களுக்கு கொடுத்திருக்கும் கிலி புரியும். அந்த கட்டடங்களின் லிஃப்ட்டுகள் எதிலும் 13ஆம் மாடிக்கு செல்வதற்கான பொத்தான் இருக்காது. உண்மையில் அக்கட்டிடம் 13 மாடிகளையும் தாண்டிய எண்ணிக்கையில் மாடிகளைக் கொண்டிருக்கும்.

ஆனாலும் 13ஆம் எண் மாடிகளின் பட்டியலில் இருக்காது. 12ஆம் மாடியிலிருந்து நேரடியாக 14வது மாடிக்கு சென்றுவிடும். இது மட்டுமின்றி, தங்களின் வீடுகளுக்கு கொடுக்கப்படும் எண்களில் கூட அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்கின்றனர். 13வதாக ஒருவேளை வீடு அமைந்துவிட்டால், 12A என்று கூட எண்ணை வாங்கிக் கொள்வார்களேயொழிய 13 என்ற எண்ணை வாங்கவே மாட்டார்கள்.

“சாத்தானின் எண்.. ராசியில்லாத எண்..” : மூடநம்பிகையை தோளில் சுமக்கும் மக்கள் - 13ஆம் எண்ணின் பின்னணி?

முன்னேறிய சமூகமாக சொல்லப்படும் அமெரிக்காவில் இந்தளவுக்கு அபத்தமான நம்பிக்கை இருக்கமுடியுமா என ஆச்சரியம் வரலாம். 13ஆம் எண் மட்டுமல்ல, அமெரிக்காவுக்கு 13-டன் தொடர்புடைய பல விஷயங்களின் மேல் அச்சம் இருக்கிறது. ‘13 என்பது சாத்தானின் எண்’ எனத் தொடங்கும் நம்பிக்கைப் பட்டியல், ‘13ஆம் எண் ராசியில்லை’, ‘13 நாளில் துயரச் சம்பவம் நடக்கும்’, ‘13ஆம் எண் யாரையேனும் பலி வாங்கும்’, ‘13ம் நாளில் பேய் வரும்’ என்பன போன்ற பலவித நம்பிக்கைகளாக அமெரிக்காவில் வளர்ந்து விரிந்து கிடக்கிறது.

13ஆம் எண்ணை சார்ந்து உருவாக்கப்பட்ட பலவித நம்பிக்கைகளின் ஒன்றுதான் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரும் நம்பிக்கை. ஒரு வருடத்தில் அதிகபட்சமாக மூன்று முறை 13ஆம் தேதிகளில் வெள்ளிக்கிழமை வருவதுண்டு. வெள்ளிக்கிழமையும் 13ஆம் தேதியும் சேர்ந்தால் அந்த தினம் ஒரு பெரும் துயரை வரவழைக்கும் என்றும் அதில் சம்பந்தப்பட்ட நபர் அடுத்த ஒரு வருடத்தில் உயிரிழப்பார் என்பதும் முக்கியமான நம்பிக்கையாக இருக்கிறது. இந்த நம்பிக்கை மதத்துடனும் இணைக்கப்பட்டதுதான் கொடுமை.

கிறித்துவ மதத்தில் முக்கியமான சம்பவம் ஒன்று உண்டு. சிலுவையிலேற்றப்படுவதற்கு முன் இயேசு பங்கு பெறும் கடைசி விருந்து. அச்சம்பவத்தின் முக்கியத்துவத்தால் அது ஓவியமாகவும் வரையப்பட்டு உலக பிரபல ஓவியமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதிலும் 13 என்கிற எண்ணை பற்றிய நம்பிக்கை விளையாடியிருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? இயேசுவுடன் சேர்த்து இந்த காட்சியில் அமர்ந்திருப்போரின் எண்ணிக்கை 13. இயேசுவின் கடைசி விருந்து என சொல்லப்படும் இந்த விருந்தில் முதலில் 12 பேர் மட்டுமே இருந்ததாகவும் கடைசியாக ஒருவன் வந்து சேர்ந்து எண்ணிக்கையை 13 ஆக ஆக்கியதாகவும் கூறப்படுகிறது. 13வதாக வந்து சேர்ந்த நபர் யார் தெரியுமா?

“சாத்தானின் எண்.. ராசியில்லாத எண்..” : மூடநம்பிகையை தோளில் சுமக்கும் மக்கள் - 13ஆம் எண்ணின் பின்னணி?

யூதாஸ்!

இயேசுவை காட்டிக் கொடுத்தவன். இயேசு இறப்பதற்கே காரணமாக இருந்தவன். கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின்படி இயேசுவை சிலுவையேற்றிய நாள் ஒரு வெள்ளிக்கிழமை. எண் 13-ம் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து உருவாக்கிய துயர் இயேசுவை கூட விட்டு வைக்கவில்லை என 13ஆம் எண்ணுக்கு பின்னிருக்கும் நம்பிக்கைக்கு விளக்கங்கள் சொல்லப்படுகின்றன.

தனிமனிதன் தொடங்கி நிறுவன முதலாளிகள் வரை இப்படி விரும்பி முட்டாளாக இருக்க முடியுமா? இருக்கலாம். எந்த மூடநம்பிக்கையும் ஓர் அரசியல் அல்லது சமூகக் காரணம் இருக்கும்போது மட்டும்தான் தொடர்ந்து நீடிக்க முடியும். 13ஆம் எண்ணுக்கு பின்னால் இருக்கும் அச்சத்தில் என்ன அரசியல் இருக்கிறது?

அமெரிக்க வரலாற்றில் எந்த அமெரிக்கரும் பார்க்க விரும்பாத காலக்கட்டம் ஒன்று இருக்கிறது. அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த காலகட்டம்! அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கன் அடிமை முறையை ஒழித்தார். அதாவது கறுப்பினத்தவரை எவரும் அடிமையாக வைத்திருக்க முடியாது எனச் சட்டம் நிறைவேறியது. கறுப்பினத்தவரை சமமாக நினைக்காத வெள்ளை இன ஆதிக்க வெறி கொண்டிருந்தோர் மத்தியில் இச்சட்டம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவிலிருந்த பல மாகாணங்கள் வெள்ளை இன வெறி கொண்டு அமெரிக்க சட்டத்தை எதிர்த்தன. அமெரிக்காவிலிருந்து பிரிவதாக அறிவித்து தனி நாடாகின. பிரிந்து சென்ற மாகாணங்களுடன் அமெரிக்கா தொடுத்த போரே உள்நாட்டுப் போர் என அழைக்கப்படுகிறது.

“சாத்தானின் எண்.. ராசியில்லாத எண்..” : மூடநம்பிகையை தோளில் சுமக்கும் மக்கள் - 13ஆம் எண்ணின் பின்னணி?

பல வருடங்களுக்கு தொடர்ந்து லட்சக்கணக்கான உயிர்களை பறித்த போர் என்றாலும் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு பின்னாலிருக்கும் வெள்ளை இன வெறியே அப்போரை பலரும் அருவருக்க முக்கிய காரணம். போருக்குப் பின் பிரிந்து சென்ற மாகாணங்கள் மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்தபோதும் வெள்ளை இன வெறி மட்டும் அடங்கவே இல்லை. வெள்ளை இன ஆதிக்கத்தையும் அமெரிக்காவை விட்டு பிரிந்ததையும் நினைவில் நிறுத்தவென தேர்ந்தெடுக்கப்பட்ட எண்தான் 13. தனி நாடாக அறிவிக்கப்பட்ட நாட்டின் (Confederate States of America) கொடியில் 13 நட்சத்திரங்கள் இடம்பெற்றன.

இங்கு எப்படி எண் 13 வந்தது?

கறுப்பினத்தவரை சக மனிதராக மதிக்க மாட்டோம் என அறிவித்துவிட்டு அமெரிக்காவிலிருந்து பிரிந்து சென்று தனி நாடான மாகாணங்களின் எண்ணிக்கை 13. டெக்ஸாஸ், அர்கான்சாஸ், லூசியானா, டென்னஸ்ஸீ, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, ஃப்ளோரிடா, சவுத் கேரோலினா, நார்த் கேரோலினா, விர்ஜினியா, மிசவுரி, கெண்டக்கி ஆகிய மாகாணங்களே அவை. நம்பிக்கைகள், பல நேரங்களில் முந்தைய வாழ்க்கைகளின் எச்சமாக இருக்கிறது. சில நேரங்களில் முந்தைய வாழ்க்கைகள் கொண்டிருந்த அழுக்குகளின் எச்சமாகவும் அவை இருக்கிறது.

banner

Related Stories

Related Stories