உலகக் போப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு உலகின் தலைசிறந்த அணிகளான அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
கொரோனா தொற்று பதற்றம் இருப்பதால் பிரேசில் நாட்டில் கடும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்திலிருந்து வரும் வீரர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே போட்டியில் பங்கேற்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஆர்ஜென்டினா வீரர்கள் எமி மார்டினெஸ், கிறிஸ்டியன் ரொமேரோ, ஆஸ்டன் வில்லா, ஜியோவானி லோ செல்சோ ஆகிய நான்கு வீரர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி போட்டியில் பங்கேற்றனர்.
இதை அறிந்த பிரேசில் சுகாதார அதிகாரிகள் போட்டி நடந்து கொண்டிருக்கும்போது மைதானத்திற்கு வந்து நான்கு வீரர்களையும் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது சக வீரர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்களை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.