உலகம்

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற தாலிபான் தலைவர்.. யார் இந்த ஷேர் முகமது? - இந்தியாவுக்கு என்ன தொடர்பு?

தாலிபான்களின் சக்திவாய்ந்த 7 தலைவர்களில் ஒருவரான ஷேர் முகமது அப்பாஸ், இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்றவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்ற தாலிபான் தலைவர்.. யார் இந்த ஷேர் முகமது? - இந்தியாவுக்கு என்ன தொடர்பு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தாலிபான்களில் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற்றவர் என்ற தகவல் தெரியவந்துள்ளது. கடந்த 1971ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவ அகாடமி ஆப்கானிஸ்தானின் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தது.

அதன்படி, கடந்த 1982ஆம் ஆண்டு டோராடூனில் ஆப்கான் இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளித்தது. அந்த சமயத்தில் ஆப்கன் ராணுவத்தில் இருந்து பயிற்சிக்கு சேர்ந்தவர் ஷேர் முகமது அப்பாஸ். அப்போது இந்தியாவில் இராணுவம் சார்ந்த அனைத்து பயிற்சிகளையும் பெற்று நாடு திரும்பிய ஷேர் முகமது, 1996-ம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விலகி தலிபான்களிடம் சேர்ந்துவிட்டார்.

மேலும் சரளமாக ஆங்கிலம் பேசும் திறமையால் 1997-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தாலிபான்கள் 2001க்கு முன்னதாக ஆட்சியில் இருந்தபோது இவர் தாலிபான்களின் துணைத் தலைவராக இருந்தார். இவர் ஆப்கன் அரசுடன் தாலிபான் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றிருக்கிறார்.

மேலும், பல்வேறு உலக நாடுகளில் நடந்த ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தாலிபான்களை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருக்கிறார். குறிப்பாக, தற்போது தாலிபான்களின் சக்திவாய்ந்த 7 தலைவர்களில் ஒருவராக ஷேர் முகமது அப்பாஸ் கருதப்படுகிறார்.

banner

Related Stories

Related Stories