உலகம்

US Army கட்டுப்பாட்டுக்குள் காபூல் ஏர்போர்ட்.. அமெரிக்காவின் உதவியை நாடிய இந்தியா? ஆப்கனில் நடப்பது என்ன?

காபூல் விமான நிலையம் இன்று அமெரிக்க ராணுவத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

US Army கட்டுப்பாட்டுக்குள் காபூல் ஏர்போர்ட்.. அமெரிக்காவின் உதவியை நாடிய இந்தியா? ஆப்கனில் நடப்பது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்ததைத் தொடர்ந்து எதாவது ஒரு விமானத்தில் ஏறி தப்பிக்க முடியுமா என்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காபூல் விமான நிலையத்துக்குள் புகுந்ததால் விமான நிலையம் முழுமையாக முடங்கியது.

இதனால் அமெரிக்கா, இந்தியா உள்பட 60 நாடுகளின் குடிமக்களை மீட்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவர்களை மீட்கும் விதமாக அமெரிக்க ராணுவம் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காபூல் விமான நிலையத்தின் ஓடுதளம் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

US Army கட்டுப்பாட்டுக்குள் காபூல் ஏர்போர்ட்.. அமெரிக்காவின் உதவியை நாடிய இந்தியா? ஆப்கனில் நடப்பது என்ன?

விமான நிலையத்துக்கு வெளியே கூடியுள்ள மக்களையும் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் தொடர்கின்றன. எனவே ராணுவ விமானங்கள் மூலம் வெளிநாட்டு குடிமக்களை மீட்கும் நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காபுல் இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் என்று பல இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.

இது தவிர பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் பலர் வேறு இடங்களில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைவரையும் அழைத்து வருவதற்கு இந்தியா அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவும் வகையில் தொலைபேசி எண், இ மெயில் விபரங்களை இந்திய வெளி உறவுத்துறை வெளியிட்டுள்ளது.

நேற்று முன் தினம் ஏர் இந்தியா மற்றும் சி17 விமானம் மூலம் பலர் மீட்டு வரப்பட்டனர். மேலும், ஒரு ராணுவ விமானம் காபுலில் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்கிற விபரங்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories