உலகம்

“இன்று இரவுக்குள் நாங்க கொடுத்த 1 பில்லியன் டாலரை திருப்பிக் கொடுங்க” - பாகிஸ்தானுக்கு அமீரகம் நெருக்கடி!

ஒரு பில்லியன் டாலர் கடனை இன்று இரவுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு, ஐக்கிய அரபு அமீரகம் கெடு விதித்துள்ளது.

“இன்று இரவுக்குள் நாங்க கொடுத்த 1 பில்லியன் டாலரை திருப்பிக் கொடுங்க” - பாகிஸ்தானுக்கு அமீரகம் நெருக்கடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், வல்லரசு நாடுகள் முதல் சிறிய நாடுகள் வரை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்த நெருக்கடியில் இருந்து பாகிஸ்தானும் தப்பவில்லை. பாகிஸ்தானிலும் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால், பாகிஸ்தானுக்கு உதவும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம், ஒரு பில்லியன் டாலர் வழங்கியுள்ளது. இந்த பணத்தைப் பாகிஸ்தானின் மத்திய வங்கியான ஸ்டேட் பேங் ஆஃப் பாகிஸ்தானில் செலுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று இரவுக்குள் தங்களிடம் வாங்கிய கடன் தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என ஐக்கிய அமீரகம் பாகிஸ்தான் உயர்அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது, கடன் தொகையை அமீரகம் திருப்பிக் கேட்டுள்ளதால் பாகிஸ்தான் அரசு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. மேலும் பாகிஸ்தானில் பொருளாதாரம் கடுமையாகச் சரிவடைந்த நிலையில், கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என அமீரகம் கேட்டுள்ளதால் பிரதமர் இம்ரான் கான் இவ்வளவு பெரும் தொகையை எப்படி செலுத்துவது என வழி தெரியாமல் பீதியில் உள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் சயித்தை சந்தித்து கடனை திருப்பியளிக்க கால அவகாசம் கேட்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories