உலகம்

காற்றை தண்ணீராக மாற்றும் வண்டு : விவசாயத்தில் அறிவியலின் அடுத்த பாய்ச்சல் !

நமீப் என்ற பாலைவனத்தில் வண்டு ஒன்று பனித்துளிகளைத் தண்ணீராக மாற்றி குடித்து, வாழ்ந்து வருகிறது.

காற்றை தண்ணீராக மாற்றும் வண்டு : விவசாயத்தில் அறிவியலின் அடுத்த பாய்ச்சல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்த பூலோகத்தில் நீர் என்பது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் ஆதாரத்தேவை. காடுகளும் தொடங்கி நீர்நிலைகள் வரை அனைத்து இயற்கை வளங்களும் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால், உலகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. அடுத்து ஒரு உலகப்போர் நிகழ்ந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என பலர் சொல்லி வருகின்றனர்.

ஏன் தமிழ்நாட்டிலும் கூட, கோடைக்காலம் வந்தாலே தண்ணீர் பிரச்சனையும் சேர்ந்தே வந்துவிடும். மக்கள் குடங்களைக் கையில் ஏந்தி, தண்ணீருக்காக வீதி, வீதியாகச் செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படும். ஆண்டுக்கு, 90 செ.மீட்டர் மழை பெய்யும் தமிழ்நாட்டிலேயே இந்நிலை என்றால், வெறும் 2 செ.மீட்டர் மழை பெய்யும் பாலைவனப் பகுதிகளில், தண்ணீருக்காக மக்கள் படும் கஷ்டங்களை நாம் சொல்லவா வேண்டும்.

பாலைவனப்பகுதி மக்களுக்கு தண்ணீர் ஒரு பிரச்சனையாக இருக்கும் போது, விலங்குகளுக்கும் இப்பிரச்சனை இருக்கவே செய்யும். பாலைவனத்தில் இருக்கும் ஒரு வகையான வண்டு, பனிக் காற்றைத் தண்ணீராக மாற்றி வாழ்ந்து வருகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

காற்றை தண்ணீராக மாற்றும் வண்டு : விவசாயத்தில் அறிவியலின் அடுத்த பாய்ச்சல் !

மேலும் இந்த வண்டின் செயல்முறையைப் பயன்படுத்தி பனித்துளியில் இருந்து தண்ணீரை எடுத்து அதை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். எந்த நாடு இப்படிப் பயன்படுத்தியது? அந்த அதிசய வண்டு எது என்பதைப் பற்றி நாம் பார்ப்போம்:-

தென்மேற்கு ஆபிரிக்காவின் அருகே நமீபியா என்ற ஒரு நாடு உள்ளது. இங்கு இருக்கும் நமீப் பாலைவனத்தில் தான் இந்த அதிசய வண்டு வாழ்ந்து வருகிறது. இந்த பாலைவனத்தின் அருகே அண்டார்டிக் கடல் இருப்பதால், விடியற் காலையில் பாலைவனம் நோக்கிப் பனிப் புயல் வீசுகிறது.

இந்த நேரத்தில், stenocara gracilipes என்ற வண்டு பாலைவனத்தில் உயரமான பகுதிக்கு சென்று, தன் உடலை 45 டிகிரிக்கு சாய்த்துக்கொள்ளும். அப்போது வண்டின் மேற்பகுதியில் இருக்கும் சிறிய துளைகளில் பனித்துளிகள் ஒட்டிக்கொள்கிறது. இந்த துளைகளை hydrophilic என்று சொல்கிறார்கள்.

காற்றை தண்ணீராக மாற்றும் வண்டு : விவசாயத்தில் அறிவியலின் அடுத்த பாய்ச்சல் !

பின்னர் நிறைய பனிதுளிகள் சேர்ந்த உடன், அதை தண்ணீராக மாற்றிய, தலைக்கு வரவைத்துக் குடிக்கிறது. இந்த வண்டின் செயல்முறையைக் கொண்டு விஞ்ஞானிகள் பாலைவனத்தில் தண்ணீரை சேகரிக்க முயற்சி செய்தனர்.

இந்த செயல்முறை வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, வண்டின் மேற்பகுதியில் இருக்கும் hydrophilic -கைப் போல், ஒரு வலை செய்து பனிதுளிகள் அதிகம் விழும் இடங்களில் கட்டிவைத்தனர்.

இந்த வலையில் விழும் பனித்துளிகளைத் தண்ணீராக மாற்றி, பாலை வனப்பகுதியில் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு 250 லிட்டர் தண்ணீர் சேகரிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

காற்றை தண்ணீராக மாற்றும் வண்டு : விவசாயத்தில் அறிவியலின் அடுத்த பாய்ச்சல் !

மேலும், பெரு நாட்டில், அதிகமாக பனித்துளிகள் பெய்யக்கூடிய 60க்கும் மேற்பட்ட இடங்களில் இம்மாதிரியான வலையைக் கட்டி தண்ணீரைச் சேமித்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் கூட இப்படியான ஒரு முயற்சி செய்தால் நன்றாகத்தான் இருக்கும்.

banner

Related Stories

Related Stories