உலகம்

58 ஆண்டுகள் உணவளிக்கும் ‘உலக உணவு திட்டம்’ என்ற அமைப்புக்கு ‘அமைதிக்கான நோபல் பரிசு’ அறிவிப்பு!

2020ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு ‘உலக உணவு திட்டம்’ என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

58 ஆண்டுகள் உணவளிக்கும் ‘உலக உணவு திட்டம்’ என்ற அமைப்புக்கு  ‘அமைதிக்கான நோபல் பரிசு’ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகளவில் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா இன்ஸ்ட்டியூட்டில் உள்ள நோபல் பரிசுக் குழுவால் திங்கட்கிழமை முதல் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கிவருகிறது.

அதன்படி முதல் கட்டமாக கடந்த 5ம் தேதி மருத்துவத்துக்கான 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பிரிட்டன், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டது. அதில், அமெரிக்க விஞ்ஞானி ஹார்வே ஜே.ஆல்டர் (வைராலஜிஸ்ட்), பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன், அமெரிக்க விஞ்ஞானி சார்லஸ் எம். ரைஸ் (பேராசிரியர் ராக்கர் ஃபெல்லர் பல்கலைக்கழகம்) ஆகியோருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 6ம் தேதி, 2020ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதில், கருந்துளை பற்றிய ஆய்வுக்காகவும், விண்மீனின் மையத்தில் அதிசயிக்கத்தக்க பொருளை கண்டுபிடித்ததற்காகவும் மூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கருந்துளை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் மையத்தில் அதிசயிக்கத்தக்க பொருளை கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகியோருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போல், 2020ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜெர்மனியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் டோடுனா, ஜெர்மனியைச் சேர்ந்த இமானுல் சார்பென்டர் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மேற்கொண்ட மரபணு மாற்றம் குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டது.

இதனிடையே நேற்றைய தினம், 2020ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிழையில்லா கவித்துவக் குரலும், அழகும் பொருந்திய கவிதைகளுக்காக லூயிஸ் க்ளக்கிற்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஐ.நா. அவையின் ‘உலக உணவு திட்டம்’ என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோபல் குழு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகம் முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்காக 58 ஆண்டுகள் உணவு அளித்ததற்காக 2020ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ‘உலக உணவு திட்டம்’ என்ற அமைப்புக்கு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories