மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருகுலைய செய்துள்ளது.
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் மளமளவென பற்றி எரியத் தொடங்கிய தீ தீடிரென பெரும் சத்ததுடன் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் துறைமுகப்பகுதியைச் சுற்றியுள்ள 30 கி.மீ தொலைவுக்கு தீ விபத்தின் தாக்கம் உணரப்பட்டது.
இதுதொடர்பான வெளியான வீடியோவில், விபத்து சம்பவத்தின் போது அருகில் அமைந்திருந்த கட்டடங்கள் சுக்குநூறாக நொருங்கிருப்பதை காணமுடிந்தது. இந்த விபத்தால் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் 30 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனானில் உள்ள செய்தி நிறுவனமான என்.என்.ஏ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்நாட்டின் துறைமுகப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
Ammonium Nitrate என்ற வெடிமருந்து பொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து, 234 கி..மீ. தொலைவில் உள்ள சைப்ரஸ் நாட்டில் உணரைப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து பெய்ரூட் நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 கி.மீ தூரங்களுக்கு பரவிய சேதங்களை கணக்கிடும் பணி மற்றும் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. குண்டுவெடிப்பு எதிரொலியாக இன்று தேசிய துக்க நாளாக கடைபிடிக்கப்படும் லெபனான் பிரதமர் ஹசன் டியப் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த லெபனான் பிரதமர் ஹசன் டியப், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தான் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.