உலகம்

Ctrl + C,X,V-ஐ கண்டறிந்த விஞ்ஞானி லேரி டெஸ்லர் காலமானார் - தொழில்நுட்ப அறிஞர்கள் அஞ்சலி!

கணினி பயன்பாட்டின் முக்கிய அம்சமான Cut, Copy, Paste அம்சத்தை கண்டுபிடித்தவருக்கு ஜெராக்ஸ் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Ctrl + C,X,V-ஐ கண்டறிந்த விஞ்ஞானி லேரி டெஸ்லர் காலமானார் - தொழில்நுட்ப அறிஞர்கள் அஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கணினி மற்றும் ஃபோன்களில் Cut, Copy, Paste ஆகிய அம்சங்களை கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி லேரி டெஸ்லர் தனது 74வது வயதில் காலமானார். இவரது மறைவு தொழில்நுட்பவியல் அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணிப்பொறியை எளிமையாக பயன்படுத்தும் வகையில் Keyboard & Mouse மூலம் கட், காப்பி, பேஸ்ட் என்ற கட்டளைகளையும், உரைகளில் தவறாக உள்ளதை மாற்றவும், தேடவும் உதவும் வகையில் Find & Replace என்ற அம்சத்தையும் கண்டறிந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப விஞ்ஞானி லேரி டெஸ்லர்.

Ctrl + C,X,V-ஐ கண்டறிந்த விஞ்ஞானி லேரி டெஸ்லர் காலமானார் - தொழில்நுட்ப அறிஞர்கள் அஞ்சலி!

பிரபல நிறுவனமான ஜெராக்ஸில் பல்லாண்டுகளாக பணியாற்றியபோது மேற்குறிப்பிட்ட அம்சங்களை கண்டுபிடித்தார் லேரி டெஸ்லர். அமெரிக்காவின் நியூயார்க் பிராங்க்ஸில் 1945ம் ஆண்டு பிறந்த லேரி, கலிஃபோர்னியாவில் உள்ள Stanford பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிப்பை முடித்து அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகவும் இருந்தார்.

1980-97 வரை 17 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்த லேரி, அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிறகு கல்வி நிறுவனம் ஒன்றையும் நிறுவினார். பின்னர், 2009ம் ஆண்டுக்கு பிறகு அமேசான்.காம், யாஹூ, போன்ற நிறுவனங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.

லேரி டெஸ்லரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜெராக்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப உலகில் லேரியின் பல்வேறு புரட்சிகர சிந்தனைகள் வேலைப்பளுவைக் குறைத்து சுலபமாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் லேரி டெஸ்லர் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories