அமெரிக்கா - ஈரான் பிரச்னை கடந்த சில வாரங்களாகவே முற்றி வருகிறது. குறிப்பாக, ஈரான் இராணுவ தளபதி சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், அமெரிக்காவை பழிவாங்கும் நோக்கோடு ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இராணுவ தளவாடங்கள் மீதும், அமெரிக்க தூதரகம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதிகளில் சரமாரியாக ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் சுமார் 5 குண்டுகள் அடுத்தடுத்து தாக்கப்பட்டதாகவும், அதில் மூன்று குண்டுகள் நேரடியாக அமெரிக்க தூதரகத்தை தாக்கியதாகவும் அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. ஏற்கனவே ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றப்பட வேண்டுமென அந்நாட்டு மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.