உலகம்

அமெரிக்க அதிபருக்கான போட்டியிலிருந்து திடீரென விலகிய கமலா ஹாரீஸ் : காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தீடீரென விலகியுள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான போட்டியிலிருந்து திடீரென விலகிய கமலா ஹாரீஸ் : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினராக பதவி வகிப்பவர் கமலா ஹாரிஸ். இவர் தொடர்ந்து ட்ரம்ப் மற்றும் அவரது அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக கமலா ஹாரீஸ் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து அவரது தேர்தல் பிரசாரத்துக்காக உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் நன்கொடை வழங்கி வந்தனர். இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கமலா ஹாரீஸ் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான போட்டியிலிருந்து திடீரென விலகிய கமலா ஹாரீஸ் : காரணம் என்ன?

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''நான் இன்றுடன் எனது பிரசாரத்தை நிறுத்திக் கொள்கிறேன். அனைத்து மக்களுக்கும் நீதி கிடைக்க தினமும் போராடுவேன். எனது பிரசாரத்தைத் தொடர போதுமான நிதி இல்லை'' எனக் கூறியுள்ளார்.

இதனை கிண்டல் அடிக்கும் விதமாக அமெரிக்க அதிர் டிரம்ப், “நாங்கள் உங்களை மிஸ் செய்வோம்” என ட்வீட் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ், “கவலைப்படாதீர்கள் அதிபரே, உங்களை விசாரணையில் சந்திப்பேன்'' எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவியை தவறாக பயன்படுத்தியதாக டிரம்ப் மீது விசாரணை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories