உலகம்

“காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையை நிராகரித்த இத்தாலி அரசுக்கு இயற்கை கற்றுக் கொடுத்தப் பாடம்”

இத்தாலியில் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கை குறித்த அறிக்கையை நிராகரித்த உடனேயே சபை வெள்ளம் புகுந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

“காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையை நிராகரித்த இத்தாலி அரசுக்கு இயற்கை கற்றுக் கொடுத்தப் பாடம்”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இத்தாலின் வெனிஸ் நகரத்தில் கடந்த 2 நாட்களில் பெய்த மழையால் 150செ.மீ உயரத்துக்கு வெள்ளம் நகரத்தை சூழ்ந்துள்ளது. கடந்த 50 வருடங்களுக்கு பிறகு மோசமான வெள்ளத்தால் வரலாற்று சிறப்புமிக்க இத்தாலிய நகரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெனிஸ் நகரத்தில் உள்ள வெனிஸின் கிராண்ட் என்ற பகுதியில் 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரவு செலவுத் திட்டத்தை முக்கிய அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சியினர் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஜனநாயகக் கட்சி நிர்வாகி ஆண்ட்ரியா சனோனி, காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் கோரிக்கை வைத்து அதற்கான வரைவு அறிக்கையை சமர்பித்துள்ளார்.

ஆனால், நடந்த காலத்திலேயே காலநிலை மாற்றத்தை சமாளிக்க போதிய நிதி மற்றும் நடவடிக்கை எடுத்ததாகக் கூறி இத்தாலி அரசு அந்த வரைவு அறிக்கையை நிராகரித்துள்ளது.

ஆனால் நிராகரித்த அடுத்த இரண்டு நிமிடத்திலேயே வெள்ளம் கூட்டம் நடந்த அறைக்குள் புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறுப்பினர்கள் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதுகுறித்த தகவலையும், புகைப்படத்தையும் ஜனநாயகக் கட்சி நிர்வாகி ஆண்ட்ரியா சனோனி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவரது அலோசனைகள் படி, அரசு காலநிலையை எதிர்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், வானிலை இன்னும் மோசம் அடைந்து வெள்ளம் 160 செ.மீ ஆக அதிகரிக்கும் என வானிலை மையம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories