உலகம்

ட்விட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை : ட்விட்டர் தலைமை நிர்வாகி தகவல்!

அரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் இடம் கிடையாது என அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை : ட்விட்டர் தலைமை நிர்வாகி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகில் பெரும்பாலானோரால் பயன்படுத்தும் ஒரு சமூக வலைதளம் ட்விட்டர் ஆகும். முக்கியத் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் தளமாக ட்விட்டர் செயல்பட்டு வருகிறது.

பல அரசியல் கட்சிகள், சமூக வலைதளங்களை பிரச்சார ஆயுதமாக பயன்படுத்திவருகின்றன. இந்நிலையில், அரசியல் விளம்பரங்களுக்கு இனி ட்விட்டரில் இடம் கிடையாது என அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''உலகளவில் ட்விட்டரில் அனைத்து அரசியல் விளம்பரங்களையும் நிறுத்த முடிவு செய்துள்ளோம். இணையதளம் போன்ற சக்திவாய்ந்த கருவி தவறான காரியங்களுக்குப் பயன்படக் கூடாது. இதில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அவர்களின் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டுப்பாடுகள் நவம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை ட்விட்டரின் வணிகத்தை கணிசமாகக் குறைக்கும் என கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories