கனடாவில் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் அறிவித்தார். இதையடுத்து கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது.
அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக போட்டியிட்டார். கனடாவில் மொத்தம் 338 மக்களவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு கட்சி 170 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும்.
இந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்தன. குயூபெக் என்ற நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரிக்க ஜஸ்டின் தடை விதித்தை முன்வைத்து, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்ட்டி தீவிர பிரச்சாரம் செய்து வருவதால் இந்த பின்னடைவு எனவும் கூறப்பட்டது.
கனடாவின் இரண்டு முக்கிய கட்சிகளுமே தனித்து ஆட்சியை அமைப்பதற்கு தேவையான 170 இடங்களை வெல்லாது என கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஜஸ்டின் ட்ரூடோ சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க நேரிடும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார பெருமைகளை உணர்ந்தவர். தமிழர்களின் விழாக்களில் பட்டுவேட்டி, பட்டுச்சட்டை சகிதமாக குடும்பத்தோடு கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வி அடையும் என கணிக்கப்பட்ட இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது ஜஸ்டின் மீண்டும் அந்நாட்டு பிரதமராவதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜஸ்டினின் லிபரல் கட்சி முன்னிலை வகிப்பதை தொடக்க முடிவுகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் ஆதரவாளர்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கியுள்ளனர்.