உலகம்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் - மனைவிக்கும் நோபல் பரிசு!

2019ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் - மனைவிக்கும் நோபல் பரிசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியரான அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்ளோ, மைக்கேல் கிரமர் ஆகிய மூவருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

உலகளவில் வறுமையை ஒழிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொண்டது, அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்ததற்காக அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வகுப்பதற்காக பானர்ஜி, எஸ்தர் டஃப்ளோ, மைக்கேல் கிரமர் ஆகியோருடன் கூட்டாக முயற்சி மேற்கொண்டிருந்தார். தற்போது இந்த மூவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் - மனைவிக்கும் நோபல் பரிசு!

கொல்கத்தாவில் பிறந்த அபிஜித் பானர்ஜி, கொல்கத்தா கல்லூரிகளில் பயின்றவர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தி எம்.ஏ.பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவிற்குச் சென்று அங்கு குடியுரிமை பெற்றார்.

அபிஜித் பானர்ஜியின் தந்தை பிரசிடென்சி கல்லூரியின் பொருளாதாரப் பேராசிரியர். அவரது தாய் நிர்மலா பானர்ஜியும் பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கும் அபிஜித் முகர்ஜிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories