உலகம்

“சுற்றுலா விசா அளிப்போம்; ஆனால், இந்த விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்” - சவுதி அரசு கட்டுப்பாடு!

சவுதி அரேபியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

“சுற்றுலா விசா அளிப்போம்; ஆனால், இந்த விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்” - சவுதி அரசு கட்டுப்பாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வளைகுடா பகுதியில் இருக்கும் முஸ்லிம் நாடான சவுதி அரேபியா தமது வளர்ச்சிக்காக பெட்ரோலிய கச்சா எண்ணெய் மட்டுமின்றி, சுற்றுலா மூலமும் வருவாயைப் பெருக்க முடிவு செய்துள்ளது.

சவுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக மன்னர் சல்மானின் இளைய மகன் முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பின் பல புதிய திட்டங்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா விசா வழங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதுவரை சவுதி அரேபியா அரசு சுற்றுலா விசா வழங்க மறுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சவுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

“சுற்றுலா விசா அளிப்போம்; ஆனால், இந்த விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்” - சவுதி அரசு கட்டுப்பாடு!

இதுதொடர்பாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : சவுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், இங்குள்ள சட்ட நடைமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும். பெண்கள், தோள்பட்டை மற்றும் முழங்காலை மறைக்கும் வகையிலான உடை அணிந்திருக்க வேண்டும்.

ஆண்கள் மற்றும் பெண்கள் இறுக்கமான உடை அணியக்கூடாது. பொது இடத்தில் முத்தம் கொடுக்கக்கூடாது. மோசமான வார்த்தைகள் அல்லது படங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணியக்கூடாது. இவ்வாறான 19 கட்டுப்பாடுகளை சுற்றுலா பயணிகளுக்கு விதித்துள்ளது.

முதன்முறையாக சவுதி அரசு சுற்றுலா விசாவிற்கு அனுமதி அளித்தாலும், இவ்வாறான கட்டுப்பாடுகள் சுற்றுலா பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் சட்டதிட்டங்கள் கடுமையாக இருப்பதால் அதைப் பின்பற்றவே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories