உலகம்

இங்கே இந்தியை திணிக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவில் பயிற்று மொழியாகிறது தமிழ்!

தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் வகையில் புதிய பாடத்திட்டத்தை அறிவித்துள்ளது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு.

இங்கே இந்தியை திணிக்கும் வேளையில், ஆஸ்திரேலியாவில் பயிற்று மொழியாகிறது தமிழ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் இந்தியை திணிக்க பா.ஜ.க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வரும் வேளையில், ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் 39 சதவிகிதத்துக்கும் மேல் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஆகையால் பன்மொழி கொண்ட நாடாக ஆஸ்திரேலியா அமையவேண்டும் என்ற நோக்கில் உலகளவில் அதிகமாகப் பேசக்கூடிய மொழியாக உள்ள தமிழை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனையொட்டி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு, அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி இரண்டாவது மொழியாக கற்றுத்தரப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்த புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ், இந்தி, பஞ்சாபி, பெர்சியன், மெக்டோனியன் ஆகிய 5 மொழிப்பாடங்களை சேர்க்க என்.எஸ்.வி அரசு முடிவெடுத்துள்ளது. இதில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மொழி இரண்டாவது பாடமாகப் பயிற்றுவிக்கப்பட உள்ளது.

banner

Related Stories

Related Stories