உலகம்

கொட்டும் மழையில் 17 லட்சம் பேர் திரண்ட பிரமாண்ட பேரணி : மக்கள் எழுச்சியில் அதிர்ந்த ஹாங்காங்!  (வீடியோ)

ஹாங்காங் அரசின் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக கொட்டும் மழையில் சுமார் 17 லட்சம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

கொட்டும் மழையில்  17 லட்சம் பேர் திரண்ட பிரமாண்ட பேரணி : மக்கள் எழுச்சியில் அதிர்ந்த ஹாங்காங்!  (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஹாங்காங் அரசு காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு, 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது ஹாங்காங் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் மக்களுக்கென தனி பண மதிப்பு, சட்டம், நிர்வாகம் என இருந்து வருகிறது. ஹாங்காங் சீனா அரசுடன் சுமுகமான உறவில் தான் இருந்து வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு பரிமாற்றம் செய்வதற்கான சட்டத் திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதாவையும் சட்டசபையில் கொண்டு வந்தது. ஆனால் இது ஹாங்காங் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் போராட்டத்திற்கு பிறகு ஹாங்காங் நிர்வாகம் மசோதாவை நிறுத்தி வைத்தது. ஆனாலும் மசோதாவை முழுமையாகத் திரும்பப்பெறவில்லை. மேலும், ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரி லாம் பதவியை விட்டு விலகவேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

சென்ற வாரம் விமான நிலையத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை போலிஸார் தாக்குதல் நடத்தி அங்கிருந்து விரட்டினர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்து கலவரம் உருவானது. இந்தக் கலவரத்தில் பலரும் காயமடைந்தனர். பின்னர் இரண்டு நாட்கள் சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஹாங்காங் காஸ்வே பகுதியில் நேற்று நடந்த பேரணியில் கொட்டும் மழையிலும் சுமார் 17 லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஹாங்காங் தலைவர் கேரி லேம் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப தாங்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தி வருவதாகவும் தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories