உலகம்

ஒசாமா பின்லேடன் குறித்து பாக். பிரதமர் சர்ச்சை பேச்சு : 19 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒசாமா பின்லேடன் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒசாமா பின்லேடன் குறித்து பாக். பிரதமர் சர்ச்சை பேச்சு : 19 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற இம்ரான் கான், அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுவே அவர் பிரதமரான பிறகு மேற்கொள்ளும் முதல் அமெரிக்கா பயணமாகும். இவர்களின் சந்திப்பு உலக அளவில் பேசுபெருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் இம்ரான் கானின் பதிலும், ட்ரம்ப்பின் வார்த்தைகளுமே தான்.

இம்ரான் கான் - ட்ரம்ப் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை இம்ரான் கான் சந்தித்தார். அப்போது பாகிஸ்தானிய மருத்துவர் ஷகீல் அஃப்ரிடி சிறையில் இருக்கிறார். அவரை விடுவிக்கும் நோக்கம் இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது பேசிய இம்ரான் கான், “முன்பு பாகிஸ்தானின் உளவு அமைப்பு (ஐ.எஸ்.ஐ) அல் - கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன் இருந்த இடம்குறித்து தகவல் தந்தனர். இது தொடர்பான தகவலை அமெரிக்காவின் உளவு அமைப்பிடம் (சி.ஐ.ஏ), ஐ.எஸ்.ஐ தான் சொன்னார்கள் என சொல்வார்கள்.” என கூறிய அவர், “மருத்துவர் ஷகீலை விடுதலை செய்வது குறித்த முடிவை வெளிப்படையாக கூறமுடியாது, அது உணர்வுப் பூர்வமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் அவர் அமெரிக்காவிற்கு உளவு பார்த்துள்ளார் என்பதே எங்கள் கருத்து. பாகிஸ்தான் - அமெரிக்கா இருநாடுகளும் சுமுகமான உறவில் தான் இருக்கிறது. அமெரிக்கா எங்களுக்கு தகவல் கொடுத்திருந்தால் நாங்களே பின்லேடனை பிடித்திருக்கமுடியும். ஆனால் அமெரிக்கா அதனை செய்யவில்லை. பாகிஸ்தானுக்குள்ளேயே நுழைந்து ஒசாமாவை கொன்றது அமெரிக்கா.

ஒசாமா பின்லேடன் குறித்து பாக். பிரதமர் சர்ச்சை பேச்சு : 19 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை!

என்னதான் அமெரிக்காவின் கூட்டாளிகள் என்று சொன்னாலும் அவர்கள் எங்களை நம்பவில்லை என்றே தெரிகிறது. இந்த நிகழ்வு எங்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.” என்றார். அப்போது இடைமறித்துப் பேசிய நிருபர் பின்லேடனால் 3000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

உடனே குறுக்கிட்ட இம்ரான், “நாங்கள் இதனால் 70 ஆயிரம் பேரை பலி கொடுத்துள்ளோம். அவர்கள் செய்த செயலால் நாங்கள் கோபத்தில் தான் இருக்கிறோம். ஆனால் அதற்காக இப்போது எதுவும் செய்யமுடியாது, நான் ஒரு தனி நபர், நான் மட்டுமே ஷகீல் விஷயத்தில் முடிவு எடுக் முடியாது, எதிர்கட்சிகள் மற்றும் அரசியல் சூழல் எல்லாவற்றையும் கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

அமெரிக்க சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது குறித்து முடிவு எதையும் அமெரிக்கா எடுத்தால் பதில் நடவடிக்கையாக ஷகீல் விடுதலை குறித்து முடிவு எடுக்கமுடியும் என சூசகமாக கூறிய அவர், இதற்கான பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்தார். இதற்கு முன்னதாக ஷகீல்லை விடுவிப்பது தொடர்பாக ட்ரம்ப் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஒசாமா பின்லேடன் தாக்குதல் தொடர்பாக “பாகிஸ்தானில் ஒசாமா இருப்பது எங்களுக்குத் தெரியாது” என பாகிஸ்தான் அரசு கூறிவந்தது. இந்நிலையில் தற்போது எங்களுக்குத் தெரியும் என இம்ரான் கான் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories