உலகம்

மெக்சிகோ - அமெரிக்க எல்லையில் நீரில் மூழ்கி தந்தை மகள் பலி : மனதை உலுக்கும் புகைப்படம்!

மெக்சிகோ- அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் மனதை உலுக்கும் நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது. அந்த சம்பவம் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மெக்சிகோ - அமெரிக்க எல்லையில் நீரில் மூழ்கி தந்தை மகள் பலி : மனதை உலுக்கும் புகைப்படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சொந்த நாடுகளில் வாழ்வாதாரம் இல்லாமல் முடங்கிப் போனவர்கள் மீண்டு எழுவதற்கு அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்வார்கள். அப்படி சில நேரங்களில் குடியுரிமைச் சான்று கிடைக்காததால் இதுபோல சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பார்கள். அப்படி குடியேறும்போது ஒரு அசம்பாவித சம்பம் நிகழ்ந்துள்ளது.

மெக்சிகோவின் எல்-சல்வடார் பகுதியை சேர்ந்த ஆஸ்கார் ஆல்பர்டோ மார்டினெஸ் ராமரெஸ் என்பவர், அவரது 23 மாதமே ஆன பெண் குழந்தை வலேரியாவுடன் அமெரிக்க எல்லையை கடக்க முயற்சித்துள்ளார்.

இந்தநிலையில், வடக்கு அமெரிக்காவின் எல்லைப் பகுதிக்கும், மெக்ஸிக்கோவின் எல்லைக்கும் அருகில் பாயும் நதியான ரியோ கிரேன்டியின் கரையில் இரண்டு வயது குழந்தையும், அவரது தந்தையின் உடலும் கரை ஒதுங்கியிருந்தது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் தலையும் நீருக்குள் மூழ்கி முகம் தெரியாத நிலையில் இருந்தது. இருவரும், அமெரிக்காவின் அண்டை நாடான எல் சல்வடார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

மெக்சிகோ - அமெரிக்க எல்லையில் நீரில் மூழ்கி தந்தை மகள் பலி : மனதை உலுக்கும் புகைப்படம்!

நீரில் மூழ்கி இறந்த குழந்தை தனது தந்தையின் மேற்சட்டைக்குள் ஒடுங்கி இருந்தது. குழந்தையைக் காப்பாற்றுவதற்காக தன் உடலோடு ஒட்டினாற்போல சேர்த்து வைத்திருந்திருக்கிறார் அவர். ஆங்கில பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படமும் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அவர்களை இந்த நிலைமைக்கு தள்ளியது கடுமையான குடியுரிமை சட்டங்களே. இந்த சம்பத்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். அமெரிக்க அதிபரின் தவறான குடியுரிமை சட்டத்தின் விளைவே இது என பலர் சாடுகின்றனர். அமெரிக்கா தொடர்ந்து இதுபோல செயல்களில் ஈடுபடுவது மனிதகுலத்திற்கு எதிரானது என அந்நாட்டு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories