உலகம்

விசா பெற சமூக வலைதள கணக்கு விவரங்களை அளிப்பது கட்டாயம் : அமெரிக்கா புது ரூல்ஸ்!

அமெரிக்க விசா பெற, சமூக வலைதள கணக்கு விவரங்களை அளிப்பது கட்டாயம்.

விசா பெற சமூக வலைதள கணக்கு விவரங்களை அளிப்பது கட்டாயம் : அமெரிக்கா புது ரூல்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமெரிக்காவிற்குச் செல்வதற்கான விசா பெற, சமூக வலைதள கணக்கு விவரங்களை அளிப்பது கட்டாயம் என்ற புதிய விதிமுறையை அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் புதிய விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது : அமெரிக்க விசா பெற விரும்புபவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் பயன்படுத்தி வரும், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்-இன், யூ-ட்யூப் உள்ளிட்ட சமூக வலைதள கணக்கு விவரங்களை அளிக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளில் பயன்படுத்தும் இமெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றையும் அளிக்க வேண்டும் என புதிய விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசா கேட்போரின் கடந்த 5 ஆண்டு கால சமூக வலைதள செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படவிருக்கின்றன.

தூதரக மற்றும் அலுவலக ரீதியில் விசா கேட்பவர்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பணிக்காகவும், படிப்பதற்காகவும் அமெரிக்கா வருபவர்கள் கட்டாயம் சமூக வலைதள விவரங்களை அளிக்க வேண்டும். அமெரிக்க மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories