உலகம்

“டிரம்ப்பின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது” : ஈரான் அதிபர் ருஹானி அதிரடி!

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது என ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

“டிரம்ப்பின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது” : ஈரான் அதிபர் ருஹானி அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒபாமா காலத்தில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு விருப்பம் இல்லாததால், திடீரென ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதன் மூலம் அமெரிக்கா ஈரான் நாட்டை நேரடியாக பிரச்னைக்கு இழுத்துவிட்டது.

இந்த சூழலில் ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக, அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி உள்ளது. மேலும் ஈரான் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்களுக்கு ஆபத்து நேரிடலாம் என்ற நோக்கத்தில் படைகளை அனுப்பி வருவதாக அமெரிக்கா காரணம் கூறுகிறது. ஈரான் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் எர்பில் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை, உடனடியாக நாடு திரும்பும்படி அமெரிக்கா மே 16ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

“டிரம்ப்பின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது” : ஈரான் அதிபர் ருஹானி அதிரடி!

இதனையடுத்து ஈரான் தனது சிறிய ரக போர் விமானம், போர்க்கப்பல்களை அமெரிக்காவை நோக்கி திருப்பியதாக சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் மே 20-ம் தேதி கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது : "ஈரான் எங்களுடன் போரிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்து விடும்." என தெரிவித்துள்ளார்.

இதனைடுத்து தற்போது ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அரசு தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றியபோது, ‘‘ஈரானின் உறுதியான வளர்ச்சியை சிதைத்து விடலாம் என்பது எதிரிகளின் மாயை ஆகும். நம்மை எதிரியாக சித்தரித்து திட்டமிட்ட பொருளாதார தடைகளை உருவாக்கி இருக்கும் இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. இந்த நிலையான வளர்ச்சியே அமெரிக்காவுக்கு நாம் தெரிவிக்கும் தீர்க்கமான பதில் ஆகும். அந்நாட்டின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஈரான் ஒருபோதும் அடிபணியாது’’ என தெரிவித்துள்ளார்.

“டிரம்ப்பின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது” : ஈரான் அதிபர் ருஹானி அதிரடி!

முன்னதாக ஈரானின் பாதுகாப்பு அதிகாரி ஈரான் அமெரிக்கப் போர் பதற்றம் குறித்து கூறுகையில், “ஈரான் ஒருநாளும் போரை விரும்பாது, ஆதரிக்காது. இதனால், யாருக்கும் கீழ் அடிபணியப்போவதும் இல்லை” என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories