உலகம்

திறமையின் அடிப்படையில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை - புதிய கொள்கையை அறிவித்தார் டிரம்ப்

வெளிநாட்டி இருந்து அமெரிக்காவில் குடியேறிவர்களுக்கு குடும்ப உறவு அடிப்படையில் குடியுரிமை வழங்காமல் திறமையின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்போவதாக அமெரிக்க அதிபர் மாளிகை தற்போது அறிவித்துள்ளது.

திறமையின் அடிப்படையில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை - புதிய கொள்கையை அறிவித்தார் டிரம்ப்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீத குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. திறன் அடிப்படையில் 12 சதவீதம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

இந்த முறையை மாற்ற டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. வேலை மற்றும் திறமை அடிப்படையில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கிரீன் கார்டுகளை வழங்கவேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இந்த முறை அமல்படுத்தப்பட்டால் எச்1பி விசாவில் அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பல இந்தியர்களுக்கு விரைவில் கிரீன் கார்டு கிடைக்க வாய்ப்புள்ளது.

குடியுரிமை தொடர்பான கொள்கையில் அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அதனால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது கடினமான எனவும் கூறப்படுகிறது.

குடும்பங்கள் அல்லாமல் திறன் அடிப்படையில் புலம்பெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதற்கு கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் என்ன வழிமுறைகளைக் கொண்டுள்ளன என்று குஷ்னர் தலைமையிலான குழு யோசித்து வருகிறது.

banner

Related Stories

Related Stories