பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை சில தீவிரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.அவர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், ஐந்து நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர்.மேலும் ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்கள் அனைவரயும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபத்திருந்த காவலர் ஒருவர் இறந்ததாக தகவல் வந்துள்ளது இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குவாதர் நகரில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை சீனா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.