மியான்மரில் 10 ரோஹிங்யா முஸ்லீம்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி செய்தி வெளியிட்டதால் 2017 டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட வா லோன், கியாவ் சோ ஓ என்ற இரண்டு ராய்ட்டர்ஸ் நிருபர்கள் 500 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அரசின் ரகசிய ஆவணங்களை திருடி வெளியிட்டதாகக் கூறி அவர்களுக்கு கடந்தாண்டு மியான்மரின் யங்கூன் மாவட்ட நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்ஸ் நிருபர்களின் கைதுக்கு ஐ.நா அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் 500 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நல்லெண்ண அடிப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலையீடு, உலக நாடுகளின் அழுத்தம் மற்றும் மியான்மரின் ஜனநாயக அணுகுமுறை காரணமாக அவரகள் 500 நாட்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த இருவருக்கும் பத்திரிக்கை துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது கடந்த மே மாதம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.